அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்தார் ரவிச்சந்திரன் அஸ்வின்  

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆசியாவிலேயே அதிக விக்கெட் வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) தொடங்கியுள்ள வங்கதேசத்திற்க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் அஸ்வின் இந்த சாதனையை படைத்தார்.

அவர் வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோவை வெளியேற்றியதன் மூலம் ஆசியாவில் 420வது டெஸ்ட் விக்கெட்டை எடுத்தார்.

இதன் மூலம் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த அனில் கும்ப்ளேவை பின்னுக்குத் தள்ளி, இரண்டாவது இடம் பிடித்தார்.

இந்த பட்டியலில் இலங்கையின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் மட்டுமே ஆசியாவில் 612 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

You May Also Like

More From Author