விடுமுறையை பயனுள்ள முறையில் கழிக்க மாணவர்களுக்கு ஆத்திசூடி புத்தகம்

வந்தவாசி, செப் 28:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சி.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நேற்று மாணவர்களுக்கு முதல் பருவ தேர்வு முடிவடைந்த நிலையில் விடுமுறையை பயனுள்ள முறையில் கழிக்க ஆத்திசூடி புத்தகமும் மற்றும் எழுத்துப் பயிற்சிக்காக எழுது பொருள்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் டிஆர்.நம்பெருமாள், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் புண்ணிய கோட்டி,‌ பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் தரணி முல்லை ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.

You May Also Like

More From Author