உலக சாம்பியன்ஷிப்: அரையிறுதியில் தோல்வி; சாத்விக்-சிராக் ஜோடிக்கு வெண்கலம்  

Estimated read time 1 min read

BWF உலக சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதிப் போட்டியில், இந்தியாவின் முன்னணி ஆடவர் இரட்டையர் பேட்மிண்டன் ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் தோல்வியைத் தழுவி வெண்கலப் பதக்கத்தைப் பெற்றனர்.
பாரிஸில் நடைபெற்ற பரபரப்பான மூன்று சுற்று அரையிறுதிப் போட்டியில், அவர்கள் சீனாவின் சென் போ யாங் மற்றும் லியு யி ஆகியோரிடம் தோல்வியடைந்தனர்.
முதல் சுற்றை 19-21 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த இந்திய ஜோடி, இரண்டாவது சுற்றில் 21-18 என மீண்டு வந்து, போட்டியை மூன்றாவது சுற்றுக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், கடைசிச் சுற்றில் சீன ஜோடி 21-12 என்ற புள்ளிக்கணக்கில் எளிதாக வென்று, இந்திய ஜோடியின் உலக சாம்பியன்ஷிப் பயணத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.

You May Also Like

More From Author