சீனக் குதிரை ஆண்டிற்குப் பல நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து

Estimated read time 1 min read

சீன மக்கள் குதிரை ஆண்டை வரவேற்பதற்கு, அண்மையில் பல நாடுகளின் தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பொறுப்பாளர்கள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொது செயலாளரும், அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங்கிற்கு வாழ்த்து செய்தியை அனுப்பினர்.

ஜெர்மனி தலைமை அமைச்சர் பிரீட்ரிக் மெர்ஸ் தனது சமூக ஊடகத்தில் சீன வசந்த விழா வாழ்த்துக்களைப் பதிவிட்டு குதிரை ஆண்டில் ஜெர்மனி-சீன உறவுக்குச் சக்தி மற்றும் புதிய உந்து ஆற்றலைக் கொண்டு வர வேண்டுமென எதிர்ப்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

சீனா அமைதியாகவும் செழுமையாகவும் வளர்ந்து சீனத் தேசத்தின் மறுமலர்ச்சி லட்சியம் தொடர்ந்து முன்னேற வேண்டுமென பாகிஸ்தான் அரசுத் தலைவர் ஆசிஃப் அலி சர்தாரி வாழ்த்து தெரிவித்தார். மேலும், இவ்வாண்டு பாகிஸ்தான்-சீன உறவு நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவாகும். அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் தொலைநோக்கு வாய்ந்த தலைமையில், இரு நாடுகள் மேலும் நெருக்கமான ஒத்துழைப்புகளின் புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதாகவும் அவர் கூறினார்.  

 

You May Also Like

More From Author