ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் செயற்குழுக்கூட்டம் ஜுலை 15ம் நாள் சீனாவின் தியேன் ஜின் மாநகரில் துவங்கியது. இவ்வமைப்பின் பல்வகை ஒத்துழைப்புகள், முக்கிய சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகள் முதலியவை குறித்து, பல்வேறு தரப்புகள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டு, தொகுதியான தீர்மானங்கள் மற்றும் ஆவணங்களில் கையொப்பமிட்டுள்ளன.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2024-2025ம் ஆண்டு தலைமை வகிக்கும் நாடு சீனா ஆகும். இவ்வாண்டின் இலையுதிர்காலத்தில் தியே ஜின் மாநகரில் இவ்வமைப்பின் உச்சிமாநாடு நடைபெறவுள்ளது. இந்நிலையில் உச்சிமாநாட்டுக்கு அரசியல் ஆயத்தம் செய்வது, இச்செயற்குழுக்கூட்டத்தின் நோக்கமாகும்.