4.35 டிரில்லியன் ரூபாய் நிதிப் பற்றாக்குறை; மத்திய அரசு தகவல்  

2024-25 நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் இந்தியாவின் நிதிப்பற்றாக்குறை ரூ.4.35 டிரில்லியனாக உள்ளதாக மத்திய அரசு திங்கட்கிழமை (செப்டம்பர் 30) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது நடப்பு நிதியாண்டிற்கான மொத்த மதிப்பீட்டில் 27 சதவீதம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரவுகளின்படி, இந்த காலகட்டத்திற்கான நிகர வரி வரவுகள் ரூ. 8.74 டிரில்லியன் அல்லது ஆண்டு இலக்கில் 34 சதவீதம் ஆக உள்ளது.
இந்த காலகட்டத்தில் அரசின் மொத்த செலவினம் ரூ.16.52 டிரில்லியன் அல்லது ஆண்டு இலக்கில் சுமார் 34 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ரூ.16.72 டிரில்லியனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author