ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டுகளில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
இதனையடுத்து நாடு முழுவதும் கொந்தளிப்பு கிளம்பியது. கடந்த கால ஜெகன்மோகன் ஆட்சியின்போது திருப்பதி லட்டு தயாரிக்க தரம் தாழ்ந்த நெய் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு குழுவை அமைக்க உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, முந்தைய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் இந்த முறைகேடு ஏற்பட்டதாகக் கூறி, லட்டுவில் கலக்கப்பட்ட மூலப்பொருட்களை உறுதி செய்த ஆய்வறிக்கையையும் அவர் வெளியிட்டார்.
அதில் லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனால் பக்தர்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டது.