8வது ஊதியக் குழுவுக்கு உறுப்பினர்களை நியமிக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்பதல் வழங்கியுள்ளது.
8வது ஊதியக் குழுவுக்கு உறுப்பினர்களை நியமிக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்பதல் வழங்கியுள்ளது. அதாவது, 8வது ஊதியக்குழுவுக்கு 3 உறுப்பினர்களை நியமித்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இக்குழு செயல்படும் நாளில் இருந்து 18 மாதங்களுக்குள் ஒன்றிய அரசுக்கு பரி்ந்துரைகளை வழங்கும். 8வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரை விதிமுறைகளை மத்திய அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. இதன் மூலம், 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 69 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவர். 8வது ஊதியக்குழுவுக்கு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும் பிரஸ் கவுன்சில் தலைவருமான ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பகுதிநேர உறுப்பினராக ஐஐஎம் பெங்களூரு பேராசிரியர் புலக் கோஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உறுப்பினர் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி பங்கஜ் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார்.
