பண்டிகை காலம் வந்துவிட்டது. நாடு முழுவதும், நவராத்திரி வெகு விமரிசையாகக் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.
நவராத்திரி முதல் துர்கா பூஜை வரை, இந்த திருவிழாவிற்கு பல பெயர்கள் உள்ளன.
ஆனால் அனைத்திற்குமே ஒரே ஒரு நோக்கம்-மகிழ்ச்சி மற்றும் மக்கள் தங்கள் சொந்தங்களுடனும் உற்றார் உறவினர்களுடன் மகிழ்ச்சியாக கழிப்பது தான்.
நவராத்திரி என்பது ஒன்பது இரவுகள் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
இந்த நாட்களில் சக்தி தேவியை வழிபடுவது வழக்கம்.
இந்த பண்டிகை நாடு முழுவதும், வெவ்வேறு மாநிலங்களில் கொண்டாடப்பட்டாலும், அதற்கு வெவ்வேறு பெயர்கள் மற்றும் சடங்குகள் உள்ளன.
தனிப்பட்ட மரபுகள் மற்றும் புராணங்களை ஒன்றிணைத்து, நவராத்திரி நாடு முழுவதும் பல்வேறு கொண்டாட்டங்களைக் காண்கிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நவராத்திரி எப்படி கொண்டாடப்படுகிறது என்பதை பார்ப்போம்.