ஏமெய்ஷான் நகரில் பொருள் சாரா பண்பாட்டு பாரம்பரியங்களின் சிறப்பு அணிவகுப்பு நிகழ்ச்சி

அக்டோபர் 2ஆம் நாளிரவு, சிச்சுவான் மாகாணத்தின் ஏமெய்ஷான் நகரில், பொருள் சாரா பண்பாட்டு பாரம்பரியக் கண்காட்சி தொடர்பான சிறப்பு அணிவகுப்பு நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது. இது, நகரவாசிகளுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் கண்கொள்ளா பண்பாட்டு விருந்தாக அமைந்தது.

இந்த அணிவகுப்பில், உள்ளூர் குங்ஃபூ கலை, பாரம்பரிய நடனம், விளக்குக் கண்காட்சி உள்ளிட்ட தேசிய மற்றும் மாநில நிலையிலான பொருள் சாரா பண்பாட்டு பாரம்பரியங்களைக் கொண்ட 10க்கும் அதிகமான நிகழ்ச்சிகளை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். அவற்றில் தேசிய நிலை பாரம்பரியமான ஏமெய் குங்ஃபூ கலை நிகழ்ச்சி அதிக வரவேற்பைப் பெற்றது.

இத்தகைய அணிவகுப்பு நிகழ்ச்சியைத் தவிரவும், தேசிய தின விடுமுறை நாட்களில், ஏமெய்ஷான் நகரில் நடத்தப்படும் பிற 12 நிகழ்ச்சிகள், 14 சுற்றுலா தலங்கள், ஏராளமான ருசியான உணவுகள் ஆகியவை குறித்தும் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றின் வழி நகரவாசிகளும் சுற்றுலா பயணிகளும் நல்ல அனுபவங்களைப் பெற்று மகிழ்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You May Also Like

More From Author