பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை மராத்தி, பெங்காலி உள்ளிட்ட மேலும் 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்தை வழங்கியது.
இது குறித்து வெளியான அறிக்கையில்,”பாரம்பரிய மொழிகள் பாரதத்தின் ஆழமான மற்றும் பண்டைய கலாச்சார பாரம்பரியத்தின் பாதுகாவலராக செயல்படுகின்றன, ஒவ்வொரு சமூகத்தின் வரலாற்று மற்றும் கலாச்சார மைல்கல்லின் சாரத்தையும் உள்ளடக்கியது” என மத்திய அமைச்சரவை தெரிவித்துள்ளது.
அறிக்கையின்படி, பெங்காலி மற்றும் மராத்தி தவிர, பாலி, பிராகிருதம் மற்றும் அசாமிய மொழிகள் செம்மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையால், ஏற்கனவே செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்ட தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒரியா ஆகிய மொழிகள் உடன் சேர்த்து தற்போது இந்தியா மொழிகளில் செம்மொழியாக அங்கீகாரம் பெற்ற மொழிகளின் எண்ணிக்கை 11ஐ எட்டியுள்ளது.