தேநீர் விருந்தில், செனகல் அரசுத்தலைவரின் மனைவியைச்சந்தித்து பேசிய பெங் லியுவான்

 

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் மனைவி பெங் லியுவான்  செனகல் அரசுத்தலைவர் மனைவி மேரி அம்மையாரை 4ஆம் நாள் காலை பெய்ஜிங்கில் தேநீர் விருந்தில் சந்தித்து பேசினார்.

பெங் லியுவான் கூறுகையில், சீனாவும் செனகலும் பண்பாடு மற்றும் பாரம்பரியத் துறைகளில் பல ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன. மக்கள் தொடர்பு மூலம் இரு நாட்டு மக்களுக்கிடையேயான பரஸ்பர பரிந்துணர்வு மற்றும் நட்பு தொடர்ந்து ஆழமாகும் என்று அவர் எதிர்பார்ப்பு தெரிவித்தார். மேலும், பெண் கல்வி, சுகாதாரம், உடல் நலம் உள்ளிட்ட துறைகளில், மேரி அம்மையாருடன் அனுபவங்களைப் பகிரவும், இரு நாட்டு பெண்களின் இலட்சியங்களின் வளர்ச்சியை தொடர்ந்து முன்னேறுவதை தூண்டவும் அவர் விருப்பம் தெரிவித்தார்.செனகல் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது பெங் லீயுவான் நீண்டகாலமாக கவனம் செலுத்தி வருவதற்கு மேரி பாராட்டு தெரிவித்தார். மேலும், இரு நாடுகளுக்கிடையேயான பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், செனகல் மற்றும் சீனா நட்புறவின் தொடர்ச்சியை முன்னேற்றவும் அவர் விருப்பம் தெரிவித்தார்.

You May Also Like

More From Author