நயன்தாரா ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்! ‘U/A’ சான்றிதழுடன் களமிறங்கும் “ஹாய்”!

Estimated read time 1 min read

Z ஸ்டூடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் “ஹாய்” படத்தை விஷ்ணு எடவன் எழுதி இயக்குகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் “கைதி”, “மாஸ்டர்”, “விக்ரம்” போன்ற படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட விஷ்ணு எடவன், இந்த படத்தின் மூலம் தனித்துவமான காதல் மற்றும் குடும்ப கதையை கொண்டு வருகிறார்.

இந்தப் படத்தில் நயன்தாரா, கவின் ஆகியோருடன் கே.பாக்யராஜ், பிரபு, ராதிகா, சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இப்படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கான குடும்ப கதையில் உருவாகி உள்ளது.

வயதில் சிறியவன் தனக்கு மூத்த வயதுடைய ஒரு பெண்ணின் மீது காதலில் விழுகிறான் போன்ற கதைக்களத்தில் இப்படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது.

ஜி.வி.பிரகாஷ் பாடிய ‘ஹாய்’ படத்தின் முதல் பாடலான ‘கண்ணக்குழியா’ பாடல் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், ‘ஹாய்’படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தணிக்கை வாரியம் இத்திரைப்படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

You May Also Like

More From Author