பழம்பெரும் பின்னணி பாடகி பி. சுசிலா, ஆந்திர மாநிலம் விஜயநகரில் 1935-ம் ஆண்டு நவம்பர் 13-ஆம் தேதி பிறந்தவர்.
70 ஆண்டுகளுக்கும் மேலான இசைப் பயணத்தில், அவர் 25,000க்கும் மேற்பட்ட பாடல்களை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பாடி சாதனைகள் படைத்துள்ளார்.
தமிழக அரசு மற்றும் மத்திய அரசால் பல முறை விருதுகள் பெற்றுள்ளார்.
இந்திய மொழிகளில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களை பாடியதற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
அதே போல், கவிஞர் முகமது மேத்தா, மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் மற்றும் கட்டுரைகள் என பல்வேறு நூல்கள் எழுதி, 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். ‘சாகித்ய அகாடமி’ விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார்.
பாடகி பி.சுசீலா, கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு வித்தகர் விருது வழங்கிய முதல்வர்
