நடிகர் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையே அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு இருதயத்தின் முக்கிய ரத்தநாளத்தில் வீக்கம் இருந்ததாகவும், அதற்காக ஸ்டென்ட் பொறுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.
ரஜினிகாந்த் தற்போது சிகிச்சை நிறைவடைந்து, வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், இதுகுறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் கேட்டபோது, “ரஜினிகாந்த் நன்றாக உள்ளார். நேற்றிரவு கூட அவரிடம் பேசினேன். மருத்துவமனையில் ஒரு சின்ன சிகிச்சை பண்ண வேண்டியது இருக்குனு 40 நாட்கள் முன்னாடியே ரஜினிகாந்த் எங்ககிட்ட சொல்லிவிட்டார். திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடந்து வருகிறது” என்றார்.