இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான விடாமுயற்சி, கடந்த ஆண்டு முதல் பல்வேறு தாமதங்களை எதிர்கொண்ட நிலையில், தற்போது இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளது.
வெள்ளிக்கிழமை (அக்டோபர் 28) படத்தைத் தயாரிக்கும் லைகா புரொடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வமாக போஸ்ட் புரொடக்ஷன் நடந்து வருவதாக அறிவித்தது.
இதுகுறித்து லைகா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் தொடங்கியுள்ளதாக தெரிவித்தது, அதற்கான புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.
படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகாமல் இருந்ததால் ரசிகர்கள் சோகத்தில் இருந்த நிலையில், இது அவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.
மேலும், தீபாவளி தினத்தன்று படத்தின் முதல் டீசர் வெளியாகலாம் என்று கூறப்படுவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2025 பொங்கலுக்கு படத்தை பிரமாண்டமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.