என்றும் தங்கள் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்..! இசைஞானிக்கு முதல்வர் வாழ்த்து..

Estimated read time 1 min read

இன்று தனது 82வது பிறந்தநாளை கொண்டாடும் இசைஞானி இளையராஜாவுக்கு , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்.

இசைஞானி என ரசிகர்களால் கொண்டாடப்படும் இளையராஜா இன்று தனது 82வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையொட்டி ரசிகர்கள் அவரை வாழ்த்து மழையில் நனையச் செய்து வருகின்றனர். காலை முதலே திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவர்களுடன் இசைஞானியும் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். அந்தவகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

ilaiyaraja

இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் வெளியிட்டுள்ள பதிவில், “நாட்டுப்புற இசை, மெல்லிசை, துள்ளலிசை, மரபிசை, தமிழிசை, மேற்கத்திய இசை என அனைத்திலும் கரைகண்டு தமிழர்களின் பெருமைமிகு அடையாளமாகத் திகழும் இசைஞானி திரு. இளையராஜா அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.!

தங்களின் சிம்பொனி இசை தமிழ்நாட்டில் ஒலிக்கவுள்ள ஆகஸ்ட் 2-ஆம் நாளுக்காகக் கோடிக்கணக்கான இரசிகர்களில் ஒருவனாக நானும் காத்திருக்கிறேன். நேற்றும் இன்றும் என்றும் தங்கள் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முதல் உதவியாளர் சண்முகம், இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author