நவராத்திரி விழாவையொட்டி தஞ்சை பெரிய கோயிலில் பெரியநாயகி அம்மனுக்கு மீனாட்சி அலங்காரம் செய்யப்பட்டது.
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் நவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரி விழாவையொட்டி பெரியநாயகி அம்மனுக்கு, மீனாட்சி அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காட்டப்பட்டது.
அதனைத்தொடர்ந்து கோயிலின் தெற்கு மண்டபத்தில் கொலு வைக்கப்பட்டது. இதில் வைக்கப்பட்டிருந்த விநாயகர், அர்த்தநாரீஸ்வரர், கண்ணப்ப நாயனார் உள்ளிட்ட சுவாமி சிலைகள் அழகாக காட்சியளித்தன.
மேலும், நந்தி மண்டபம் அருகே நடைபெற்ற பரதநாட்டிய நிகழ்ச்சியை திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.