மாம்பட்டு முத்துமாரியம்மன் ஊஞ்சல் தாலாட்டு வைபவம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் புரட்டாசி மகாளய அமாவாசை முன்னிட்டு அம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

மேலும் உற்சவ மூர்த்தி அம்மன் கோவில் பிரகாரத்தில் மேளதாளத்துடன் வீதியுலா நடைபெற்றது. இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பங்கேற்ற அனைவருக்கும் மகா அன்னதானம் வழங்கப்பட்டது. சக்தி உபாசகர் அருட்சக்தி ஆறு. லட்சுமணன் ஸ்வாமிகள் பூஜைகளை மேற்கொண்டார்.

You May Also Like

More From Author