சீன மின்சார வாகனங்களின் மீதான சலுகைக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் வரி வசூலிப்பதற்கு சீனா எதிர்ப்பு

மின்சார வாகனங்களின் மீதான சலுகைக்கு எதிரான வரி வசூலிப்பு புலனாய்வு பற்றிய இறுதியான தீர்ப்பு வரைவை ஐரோப்பிய ஒன்றியம் வாக்களிப்பு மூலம் ஏற்றுக்கொண்டது குறித்து சீன வணிக அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அக்டோபர் 4ஆம் நாள் சீனாவின் நிலைப்பாட்டை தெரிவித்தார்.
அவர் கூறுகையில், சீனாவின் மின்சார வாகனங்கள், தன் தற்சார்புப் புத்தாக்கம் மூலம் உலகில் பசுமைப் பொருட்களின் தரமான வினியோகத்தை அதிகரிப்பதோடு, காலநிலை மாற்றத்தை சர்வதேச சமூகம் சமாளிப்பதற்கும் முக்கிய பங்காற்றி வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகப் பாதுகாப்புவாத செயல், உலக வர்த்தக அமைப்பின் விதிகளைக் கடுமையாக மீறி, இயல்பான சர்வதேச வர்த்தக ஒழுங்கினைப் பாதித்துள்ளது என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், கலந்தாய்வு மூலம் வர்த்தக சர்ச்சையைத் தீர்ப்பதற்கான சரியான பாதைக்கு ஐரோப்பிய ஒன்றியம் திரும்ப வேண்டும் என சீனா வேண்டுகோள் விடுப்பதாகவும், சீனத் தொழில் நிறுவனங்களின் நலன்களைப் பேணிகாக்க சீனா அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.

You May Also Like

More From Author