தெற்கு ஆந்திரா வட தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதன்பிறகு இன்று தமிழகத்தில் புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், ஈரோடு, கன்னியாகுமரி, விருதுநகர், நெல்லை, தென்காசி, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி ஆகிய 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும் நேற்று இரவு முதல் தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.