பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது ஸ்ரீவில்லிபுத்தூர் மஹிளா நீதிமன்றம்

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தி, பாலியல் தொழிலில் ஈடுபட தூண்டிய வழக்கில், பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 2 லட்சம் அபராதம் விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மஹிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக இந்த வழக்கில், நிர்மலா தேவி குற்றவாளி என தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், குற்றத்திற்கான தண்டனையை இன்று வாசித்தது.
கடந்த 2018ஆம் ஆண்டு, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய நிர்மலா தேவி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பெயரைக் கூறி, பாலியல் ரீதியாக மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக ஆடியோ ஒன்று வெளியானது.
இந்த விவகாரத்தில் பல அரசு அதிகாரிகள் முதல் அப்போதைய கவர்னர் பன்வாரிலால் புரோஹித் வரை தொடர்பிருப்பதாக கூறப்பட்டது.

You May Also Like

More From Author