கோயம்பேட்டில் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் மலிவான விலையில் விற்கப்படும் தக்காளி, வெங்காயம் நல்ல தரத்தில் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பருவமழை தொடங்கியுள்ள நேரத்தில் வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை கடந்த சில நாட்களாக உயர்நதுள்ளது. குறிப்பாக கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனை கடைகளில் தக்காளி கிலோ 90 ரூபாய்க்கும், சில்லறை விற்பனையில் 110 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் தக்காளி கிலோ 49 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகக் கூறி அவ்விடத்தில் பொதுமக்கள் குவிந்தனர். ஆனால், மலிவான விலையில் விற்கப்படும் தக்காளி, வெங்காயம் நல்ல தரத்தில் இல்லை என்றும், அம்மா உணவகத்திற்கு அனுப்ப வேண்டும் எனக் கூறி விற்பனை செய்ய மறுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.