திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோவில் நாளை நடையடைக்கப்படுகிறது.
முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தினசரி வருகை புரிந்து, சாமி தரிசனம் செய்வது வழக்கம். தரிசனத்திற்காக முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலை கோயிலுக்கு செல்ல படிப்பாதை யானை ,பாதை பிரதான வழியாக உள்ளது. அத்துடன் மின் இழுவை ரயில் மற்றும் ரோப் கார் சேவைகளும் இயக்கப்பட்டு வருகிறது .விரைவாகவும், இயற்கை அழகை ரசித்த படியும் ரோப் கார் மற்றும் மின் இழுவை ரயிலில் செல்லலாம்.
இந்நிலையில் பழனி கோவிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு (12.10.2024) நாளை வில் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் காலை 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் வன்னிகா சூரன் வதத்தை தொடர்ந்து, பிற்பகல் 3.15க்கு நடையடைக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.