டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட இந்தியாவுக்கு கிளம்பியுள்ளது.
அந்த அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் இல்லாத நிலையில், முழு நேர கேப்டனாக செயல்படும் டாம் லாதமிற்கு இது மிக முக்கிய தொடராக மாறியுள்ளது.
இந்த மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி அக்டோபர் 16 அன்று பெங்களூரிலும், இரண்டாவது போட்டி அக்டோபர் 24 அன்று புனேவிலும், மூன்றாவது போட்டி நவம்பர் 1 அன்று மும்பையிலும் தொடங்க உள்ளன.
நியூசிலாந்து அணி கடைசியாக இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 0-2 என தோற்ற நிலையில், இந்தியாவில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
நியூசிலாந்துக்கு எதிராக 36 ஆண்டு சாதனையை தக்கவைக்குமா இந்தியா?
You May Also Like
பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பையை வென்று இந்தியா சாதனை
November 23, 2025
T20 World Cup: கனடாவை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்
February 20, 2026
