சென்னை மேடவாக்கம் பிரதான சாலையில் மது போதையில் இரண்டு வடமாநில பெண்கள் ரகளையில் ஈடுபட்டது காண்போரை முகம் சுளிக்க வைத்தது.
பள்ளிக்கரணை அடுத்த மேடவாக்கத்தில், சாலையில் இரண்டு வடமாநில பெண்கள் போதையில் சண்டையிட்டுக் கொண்டனர். அப்போது ரோந்து பணியில் இருந்த போலீசார், இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் இருவரும் போதையில் இருந்ததால் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். இரவு நேரம் என்பதால் காவல்நிலையம் அழைத்துச் செல்ல முடியாமல் திணறிய போலீசார், அவர்களின் நண்பர்களைத் தொடர்பு கொண்டு இருவரையும் பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.