2025 ஜனவரி மாதத்தில் 86.99 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 86,99,344 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக 10.01.2025 அன்று 3,60,997 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
2025, ஜனவரி மாதத்தில் மட்டும் பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 23,78,989 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 1,800 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 7,219 பயணிகள், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 37,80,386 பயணிகள் (Online QR 1,59,162; Paper QR 18,94,376; Static QR 2,64,321; Whatsapp – 5,89,305; Paytm 4,20,389; PhonePe – 3,28,755; ONDC – 1,24,078), சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 25,30,950 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), Whatsapp, Paytm App,PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற அனைத்து வகையான பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை பெற்றுகொள்ளலாம். மெட்ரோ இரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025 பட்ஜெட் உரையின் போது அரசாங்கம் புதிய வருமான வரி மசோதாவை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தும் என்று அறிவித்தார். [மேலும்…]
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025-26 மத்திய பட்ஜெட்டில், மலிவு சிகிச்சை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் கவனம் செலுத்தும் குறிப்பிடத்தக்க சுகாதார முயற்சிகளை அறிவித்தார். [மேலும்…]
பட்ஜெட்டில் தனிநபர் மாத ஊதியம் அல்லாமல், மூலதன ஆதாயம் உள்பட பிற வகையில் பெறப்படும் வருமானத்துக்கான வரி வீதம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் [மேலும்…]
2025 ஜனவரி மாதத்தில் 86.99 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக [மேலும்…]
ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்படும் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை கடந்த மாதம் குறைந்த நிலையில் [மேலும்…]
சமீபகாலமாக விமான விபத்துகள் என்பது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நடந்த ஒரு விமான விபத்தில் 60க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்தனர். இந்த நிலையில் தற்போது [மேலும்…]
பொருளாதார ஆய்வு 2024-25 இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) வளர்ச்சி FY26 க்கு 6.3%-6.8% என்று கணித்துள்ளது. பல ஆண்டுகளாக வலுவான [மேலும்…]
9ஆவது ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹார்பின் நகரில் துவங்கவுள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களும், ஒளிபரப்பு செய்யும் நிறுவனங்களும் வேலை செய்யும் முக்கிய இடமான [மேலும்…]