டானா புயல் எதிரொலி : 28 ரயில் சேவைகள் ரத்து..! முழு விவரம் இதோ!

Estimated read time 1 min read

டெல்லி : வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை காலை கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவில் புயலாகவும் தீவிரமடையக்கூடும் எனவும் தெரிவித்திருந்தனர். மேலும், உருவாகவுள்ள புயலுக்கு டானா எனவும் பெயரிட்டுள்ளனர்.

இந்த டானா புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் அக்.-24 அன்று இரவு அல்லது அதற்கு அடுத்த நாள் அக்.-25ம் தேதி அதிகாலையில் வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரைகளை கடக்க வாய்ப்புள்ளதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்திருந்தது.

இதன் காரணமாக மேற்கு வங்காளத்தில் அக்டோபர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் பல இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புயலின் தீவிரம் கண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அன்று (அக்.-23&24) ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

அக்டோபர்-23 ரத்து செய்யப்பட்ட ரயில்கள் :

ரயில் எண் : 22503 – கன்னியாகுமரி – திப்ருகார் விரைவு ரயில்
ரயில் எண் : 12514 – சில்சார் – செகந்திராபாத் விரைவு ரயில்
ரயில் எண் : 17016 – செகந்திராபாத் – புவனேஷ்வர் விஷாகா விரைவு ரயில்
ரயில் எண் :. 12840 – எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் – ஹவுரா மெயில் விரைவு ரயில
ரயில் எண் : 12868 – புதுச்சேரி – ஹவுரா விரைவு ரயில்
ரயில் எண் : 22826 – எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் – ஷாலிமர் விரைவு ரயில்
ரயில் எண் : 12897 – புதுச்சேரி – புவனேஷ்வர் விரைவு ரயில்
ரயில் எண் : 18464 – கே.எஸ்.ஆர். பெங்களூர் – புவனேஷ்வர் பிரஷாந்தி விரைவு ரயில்
ரயில் எண் : 11019 – சி.எஸ்.சி. மும்பை – புவனேஷ்வர் கோனார்க் விரைவு ரயில்
ரயில் எண் : 12509 – எஸ்.எம்.வி. பெங்களூர் – கெளஹாத்தி விரைவு ரயில்
ரயில் எண் : 18046 ஐதராபாத் – ஹவுரா EAST COAST விரைவு ரயில்
ரயில் எண் : 12704 – செகந்தராபாத் – ஹெவுரா Falaknuma விரைவு ரயில்
ரயில் எண் : 22888 – SMVT பெங்களூர் – ஹெவுரா Humsafar விரைவு ரயில்
ரயில் எண் : 12864 – SMVT பெங்களூர்- ஹவுரா அதிவிரைவு ரயில்
ரயில் எண் : 22606 – திருநெல்வேலி – புருலியா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ்

அக்டோபர்-24 ரத்து செய்யப்பட்ட ரயில்கள் :

ரயில் எண் : 22603 – 14.05 மணிக்குப் புறப்பட இருந்த காரக்பூர் – விழுப்புரம் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்
ரயில் எண் :22851 – 14.50 மணிக்கு புறப்பட இருந்த – சந்த்ராகாச்சி – மங்களூரு விவேக் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்
ரயில் எண் :12841 – 15. 20 மணிக்கு புறப்பட இருந்த ஷாலிமார் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ்
ரயில் எண் : 12663 – 17.40 மணிக்கு புறப்பட இருந்த ஹவுரா திருச்சிராப்பள்ளி அதிவிரைவு எக்ஸ்பிரஸ்
ரயில் எண் : 12863 – 22.50 மணிக்கு புறப்பட இருந்த ஹவுரா SMVT பெங்களூரு சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்
ரயில் எண் : 12839 – 23.55 மணிக்கு புறப்பட இருந்த ஹவுரா – டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் மெயில்
ரயில் எண் : 22644 – 14.00 மணிக்கு புறப்பட இருந்த பாட்னா எர்ணாகுளம் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்
ரயில் எண் : 06090 – 23.40 மணிக்கு புறப்பட இருந்த சந்த்ராகாச்சி – டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில்.
ரயில் எண் : 12842 – 7.00 மணிக்கு புறப்பட இருந்த ஹவுரா கோரமண்டல் எக்ஸ்பிரஸ்
ரயில் எண் : 22808 – 08.10 மணிக்கு புறப்பட இருந்த டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சாந்த்ராகாச்சி ஏசி எக்ஸ்பிரஸ்
ரயில் எண் : 15227 – 00.30 மணிக்கு புறப்பட இருந்த SMVT பெங்களூரு – முசாபர்பூர் எக்ஸ்பிரஸ்
ரயில் எண் : 06095 -13.00 மணிக்கு புறப்பட இருந்த தாம்பரம் சந்த்ராகாச்சி சிறப்பு ரயில்
ரயில் எண். 12246 – 11.20 மணிக்கு புறப்பட இருந்த SMVT பெங்களூரு – ஹவுரா துரந்தோ எக்ஸ்பிரஸ்
ரயில் எண்: 06087- 01.50 மணிக்கு புறப்பட இருந்த திருநெல்வேலி – ஷாலிமார் எக்ஸ்பிரஸ்

East Coast Railway has notified cancellation of following train services as a safety measure due to #CycloneDana

Please refer NTES/IRCTC or other official railway Websites/Apps for any further updates.#SouthernRailway #CycloneInOdisha #CycloneUpdate pic.twitter.com/ips2sY6qFT

— Southern Railway (@GMSRailway) October 22, 2024

Please follow and like us:

You May Also Like

More From Author