வியட்நாமின் அரசுத் தலைவர் லுவாங் குவாங்கிற்கு ஷி ச்சின்பிங் வாழ்த்து

வியட்நாமின் அரசுத் தலைவராகப் பதவி ஏற்ற லுவாங் குவாங்கிற்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அக்டோபர் 22ஆம் நாள் வாழ்த்து தெரிவித்தார்.

ஷி ச்சின்பிங் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக, நானும் வியட்நாமின் தலைவர்களும் நெருங்கிய நெடுநோக்கு தொடர்பை நிலைநிறுத்தி, சீன-வியட்நாம் உறவு, பொது எதிர்காலச் சமூகத்தின் கட்டுமானம் என்ற நெடுநோக்கு முக்கியத்துவம் வாய்ந்த புதிய யுகத்தில் நுழைவதற்குக் கூட்டாக வழிக்காட்டி வருகிறோம்.

இரு கட்சிகள் மற்றும் இரு நாடுகளின் உயர்நிலை பொது கருத்துக்களை இரு தரப்பும் செவ்வனே செயல்படுத்தி, சீன-வியட்நாம் பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்பு மேலதிக பயனுள்ள சாதனைகளைப் பெறுவதை முன்னேற்றி, இரு நாடுகளின் நவீனமயமாக்கப் போக்கிற்கு உதவியளிக்க வேண்டும் என்றார்.

மேலும், வியட்நாம் தனது நிலைமைக்குப் பொருந்திய சோஷலிச பாதையில் முன்னேறுவதற்கு சீனா உறுதியுடன் ஆதரவளிக்கும் என்றும், சீன-வியட்நாம் உறவின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து, அரசுத் தலைவர் லுவாங் குவாங்குடன் இணைந்து, சீன-வியட்நாம் பொது எதிர்காலச் சமூகத்தின் கட்டுமானத்துக்கு வழிக்காட்டி, இரு நாட்டு மக்களுக்கு மேலதிக நன்மை புரிய விரும்புவதாகவும் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author