வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வானிலை மாற்றங்கள் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் சமீபத்திய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அந்தமான் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நவம்பர் 26 ஆம் தேதி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
இந்த புயலுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பரிந்துரைத்த ‘சென்யார்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
அரபு மொழியில் இதற்கு ‘சிங்கம்’ என்று பொருள்.
‘சென்யார்’ புயல் உருவாக வாய்ப்பு: தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை
