சென்னை தலைமைச் செயலகத்தில் திடீர் அதிர்வு; என்ன நடந்தது?  

சென்னையின் புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் இன்று காலை திடீரென அதிர்வு உணரப்பட்டுள்ளது.
இதனால் ஊழியர்கள் பதற்றத்துடன் வெளியேறினர்.
தலைமைச் செயலகத்தின் நாமக்கல் கவிஞர் மாளிகையில் பல்வேறு துறைகளின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இன்று காலை அங்கே பணியாற்றும் ஊழியர்கள் திடீரென அதிர்வினை உணர்ந்தனர். மேலும் முதல் தளத்தில் உள்ள தரையில் சத்தத்துடன் விரிசல் ஏற்பட்டது.
இதனால், பயந்த ஊழியர்கள் மாளிகையிலிருந்து அடித்துபிடித்து வெளியேறினர். இதனால் அங்கே பதற்ற நிலை ஏற்பட்டது.

You May Also Like

More From Author