மகாகவி பாரதியாரின் பிறந்த நாளையொட்டி திருவல்லிக்கேணியில் உள்ள இல்லத்தில் அவரது சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மகாகவி பாரதியாரின் பிறந்த நாளையொட்டி சென்னை திருவல்லிக்கேணியில் வானவில் பண்பாட்டு மையம் சார்பில் பாரதி திருவிழா என்ற நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகத் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் முகப்பில் இருந்து ஜதி பல்லக்கு ஊர்வலத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டனர். பின்னர், ஆளுநர் ஆர்.என்.ரவியும், தமிழிசை சௌந்தரராஜனும் ஜதி பல்லக்கை தோளில் சுமந்து சிறிது தூரம் நடந்து சென்றனர்.
இதனை தொடர்ந்து, திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனை அடுத்து, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் பாரதியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
