ஷாங்காயில் சிஎம்ஜி மன்றத்தின் கிளை கருத்தரங்குகள்

2ஆவது சிஎம்ஜி மன்றக் கூட்டம் சீன ஊடக குழுமம் மற்றும் ஷாங்காய் மாநகராட்சியின் கூட்டு ஏற்பாட்டில் ஜுலை 19 முதல் 21ஆம் நாள் வரை ஷாங்காய் மாநகரில் நடைபெற்றது.
இம்மன்றக் கூட்டத்தின்போது, மாற்றத்தில் உலகளாவிய வாய்ப்புகள், சீனாவின் நவீனமயமாக்கத்தில் உயர்தர வளர்ச்சி, உலக மாற்றத்தில் ஊடகங்களின் பொறுப்பு ஆகிய கருப்பொருட்களிலான 3 கிளை கருத்தரங்குகள் நடைபெற்றன. நூறு ஆண்டுகளில் முன்கண்டிராத மாற்றத்தில் உலகின் பல்வேறு நாடுகள் எப்படி ஒத்துழைப்பை வலுப்படுத்தி சவால்களைச் சமாளிப்பது பற்றியும், பொது மக்களின் தொடர்பு மற்றும் நாகரிகங்களின் பரஸ்பர கற்றலை முன்னேற்றுவதற்கு பல்வேறு நாடுகளின் ஊடகங்கள் எப்படி பங்காற்றுவது குறித்தும் விருந்தினர்கள் ஆலோசனைகளை வழங்கினர்.

You May Also Like

More From Author