சீன ஊடகக் குழுமமும் ரஷியத் தேசிய தொலைக்காட்சி மற்றும் வானொலி நிறுவனமும் கூட்டாக நடத்திய பிரிக்ஸ் நாட்டு ஊடகக் கலந்துரையாடல் கூட்டம் அக்டோபர் 23ஆம் நாள் கசானில் நடைபெற்றது. பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளின் அரசு அதிகாரிகளும், முக்கிய ஊடகங்களின் பொறுப்பாளர்களும் இக்கூட்டத்தில் ஆழமாக கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பரப்புரைத் துறை துணைத் தலைரும், சீன ஊடக குழுமத்தின் இயக்குநருமான ஷென் ஹாய்சியுங் இக்கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில், பிரிக்ஸ் நாடுகளின் செய்தி ஊடகங்கள், திறப்பு, இணக்கம், ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றி ஆகியவை கொண்ட பிரிக்ஸ் எழுச்சியைப் பின்பற்றி, பொது மதிப்பைப் பரப்புரை செய்து, பல்வகை நாகரிகங்களைப் பாதுகாத்து, பண்பாட்டு ஒத்துழைப்புக்கு வழிகாட்ட பாடுபட்டு வருகின்றன என்று தெரிவித்தார். பிரிக்ஸ் நாடுகளின் செய்தி ஊடகங்கள், கசானில் நடைபெற்ற பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த அமைதி, புத்தாக்கம், பசுமைமயமாக்கம், நியாயம், மனித பண்பாடு ஆகிய “ஐந்து பிரிக்ஸ் கருத்துக்களை” வழிகாட்டலாக கொண்டு, பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்கள் எட்டிய ஒத்த கருத்தை இலக்காக கொண்டு, ஊடகங்களுக்கிடையேயான நெருங்கிய ஒத்துழைப்பை சங்கிலியாக கொண்டு, பிரிக்ஸ் நாட்டு ஒத்துழைப்புக்கு மேலதிக உயிராற்றலை ஊட்டி, புதிய வரைபடத்தை வரைய வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.