சி.வி.சண்முகம் ராஜினாமாவால் காலியான ராஜ்யசபா இடத்திற்கு ஜூன் 18ல் இடைத்தேர்தல்  

Estimated read time 0 min read

தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஒரு ராஜ்யசபா (மாநிலங்களவை) இடத்திற்கு வரும் ஜூன் 18 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதிமுகவைச் சேர்ந்த சி.வி.சண்முகம், சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தனது எம்பி பதவியை கடந்த மே 7 ஆம் தேதி ராஜினாமா செய்தார்.
இதனால் ஏற்பட்ட காலி இடத்தைப் பூர்த்தி செய்வதற்காக இந்த இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 18 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்று, அன்றைய தினமே மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

You May Also Like

More From Author