சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசம் நிறுவப்பட்ட 70 ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீன ஊடகக் குழுமம் உலகின் 38 நாடுகளின் 7446 பேரிடம் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. சின்ஜியாங்கின் செழுமையான பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி சாதனைகளை அவர்கள் பாராட்டினர்.
அதிக ஆக்கப்பூர்வமான மதிப்பீட்டைப் பெற்ற 5 சாதனைகள், முறையே மருத்துவ தரத்தின் மேம்பாடு(82.1%), கல்வி பெறும் மக்களின் உரிமை உத்தரவாதம்(81.7%),அடிப்படை வசதிகளின் கட்டுமான மேம்பாடு(80.2%),உயிரினப் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை முன்னேற்றங்கள்(80.6%),மக்களின் வருமான அதிகரிப்பு(80%)ஆகும் என்று இக்கருத்து கணிப்பின் முடிவில் தெரிவிக்கப்பட்டது.