பீகார் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் தாய்ப்பாலில் யுரேனியம் (U-238) என்ற கதிரியக்கத் தனிமம் அபாயகரமான அளவில் இருப்பது சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இது 70% குழந்தைகளுக்குப் புற்றுநோய் அல்லாத (Non-carcinogenic) சுகாதாரப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
பாட்னாவில் உள்ள மகாவீர் புற்றுநோய் சன்ஸ்தான் மற்றும் புதுடெல்லியில் உள்ள எய்ம்ஸ் (AIIMS) நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
பீகாரின் பல மாவட்டங்களில் உள்ள 40 தாய்மார்களின் தாய்ப்பால் மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டதில், அனைத்து மாதிரிகளிலும் யுரேனியம் (0 முதல் 5.25 g/L வரை) கண்டறியப்பட்டது. இதில், கடிஹார் மாவட்டத்தில் அதிகபட்ச யுரேனியம் அளவுப் பதிவாகியுள்ளது.
தாய்ப்பாலில் யுரேனியம் கண்டுபிடிப்பு: 70% குழந்தைகளுக்குப் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு
