சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அக்டோபர் 24ஆம் நாள் முற்பகல் கசானில் “பிரிக்ஸ் பிளஸ்” எனும் தலைவர்களின் கூட்டத்தில் பங்கெடுத்து முக்கிய உரை நிகழ்த்தினார்.
அவர் கூறுகையில், “உலகின் தென் பகுதியின்” கூட்டு மறுமலர்ச்சி, உலகின் பெரிய மாற்றத்தில் தெளிவான சின்னமாக இருக்கிறது. “உலகின் தென் பகுதியின்” நாடுகள் நவீனமயமாக்கத்தை நோக்கி முன்னேறுவது, உலக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அதோடு, உலக அமைதி மற்றும் வளர்ச்சியில் பெரும் அறைகூவல்கள் இன்னமும் நிலவுகின்றன. “உலகின் தென் பகுதியின்” முன்னணியில் உள்ள நாடுகளாக, கூட்டு விவேகம் மற்றும் ஆற்றலை வெளிப்படுத்தி, மனித குலத்தின் பொது எதிர்கால சமூகத்தின் உருவாக்கத்துக்கு பங்காற்ற வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.
மேலும் அவர் கூறுகையில், முதலில் அமைதியில் ஊன்றி நின்று, கூட்டுப் பாதுகாப்பை நனவாக்க வேண்டும். அமைதியைப் பேணிகாப்பதற்கான நிதானமான ஆற்றலாக விளங்கி, உலக பாதுகாப்பு மேலாண்மையை வலுப்படுத்தி, முக்கிய பிரச்சினைகளுக்கான தீர்வு முறையை ஆராய வேண்டும். இரண்டு, மறுமலர்ச்சியை விரைவுபடுத்தி, பொது செழுமையை நனவாக்க வேண்டும். கூட்டு வளர்ச்சிக்கான முக்கிய ஆற்றலாக விளங்கி, உலகப் பொருளாதார மேலாண்மை அமைப்பு முறையின் சீர்திருத்தத்தில் ஆக்கமுடன் பங்கெடுத்து, இதற்கு வழிகாட்டி, வளர்ச்சியை சர்வதேச பொருளாதார மற்றும் வர்த்தக நிகழ்ச்சி நிரலில் உள்ள மைய இடத்தில் வைப்பதை முன்னேற்ற வேண்டும். மூன்று, நாகரிகத்தைக் கூட்டாக செழுமைப்படுத்தி, பலதரபட்ட இணக்கத்தை நனவாக்க வேண்டும். நாகரிகங்களுக்கிடையேயான பரிமாற்றத்தை விரைவுபுடுத்தி, தொடர்பு மற்றும் பேச்சுவார்த்தையை அதிகரித்து, தத்தமது நாட்டின் நிலைமைக்கு ஏற்ற நவீனமயமாக்கப் பாதையில் முன்னேறுவதற்கு ஆதரவளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
சர்வதேச நிலைமை எவ்வாறு மாறினாலும், அதிகாரப்பூர்வ உறுப்பு நாடு, கூட்டாளி நாடு மற்றும் “பிரிக்ஸ் பிளஸ்” ஆகிய வடிவங்களில் உலகின் “தென் பகுதியின்” மேலதிக நாடுகள், பிரிக்ஸ் இலட்சியத்தில் பங்கெடுப்பதை ஆதரித்து, “உலகின் தென் பகுதியின்” ஆற்றலை ஒன்று கூட்டி, மனித குலத்தின் பொது எதிர்கால சமூகத்தின் உருவாக்கத்தைக் கூட்டாக முன்னேற்றுவதற்கு சீனா ஆதரவளித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.