சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தின் நான்கு முனையங்களிலும் அதிநவீன பாஸ்போர்ட் இல்லாத பயோமெட்ரிக் அனுமதி முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மில்லியன் கணக்கான பயணிகளுக்கு பயண அனுபவத்தை நெறிப்படுத்துகிறது.
முன்னதாக, செப்டம்பர் 30, 2024இல் தொடங்கப்பட்ட இந்த சேவை, பாரம்பரிய பாஸ்போர்ட் சோதனைகளை மாற்ற மேம்பட்ட முக மற்றும் கருவிழி அங்கீகார தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
இது குடியேற்ற அனுமதி நேரத்தை கணிசமாகக் குறைக்கிறது. இதை வியாழக்கிழமை (அக்டோபர்24) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள அந்நாட்டின் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம், நடைமுறைப்படுத்தப்பட்ட முதல் 15 நாட்களுக்குள், 1.5 மில்லியன் பயணிகள் தங்கள் கடவுச்சீட்டைக் காட்டாமல் குடியேற்றத்தை அனுமதித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரின் குடிமக்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.