செயற்கைக்கோள் இணைய தொழில்நுட்ப சோதனை செயற்கைக்கோளை ஏவியது சீனா

செயற்கைக்கோள் இணையத் தொழில்நுட்ப சோதனை மேற்கொள்ள, செயற்கைக்கோள் ஒன்று டிசம்பர் 30ம் நாள் காலையில் ஜியுச்சுவான் செயற்கைக்கோள் ஏவு தளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது.

அது, வெற்றிகரமாக திட்டமிட்ட சுற்றுவட்டப் பாதையை அடைந்துள்ளது என்று சீனா தெரிவித்துள்ளது.


செயற்கைக்கோள் இணையமானது பிராட்பேண்ட் இணைய சேவை வழங்கக் கூடிய நவீன வசதியாகும். தரை பரப்பில் இயங்கி வரும் தகவல் தொடர்பு வலையமைப்புக்கு ஒரு துணையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author