மண்சரிவுப் பேரிடர் நிவாரணம் ஏன் இவ்வளவு கடினமாக உள்ளது?

Estimated read time 0 min read

சீனாவை ஒட்டியமைந்துள்ள நேபாளப் பகுதியில் ஆகஸ்ட் 26ஆம் நாள் காலை சமார் 10:30மணியளவில், மண்சரிவால் பேரழிவு ஏற்பட்டது. இதன் விளைவாக, சீனாவின் சிசாங் தன்னாட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷிகசே நகரில் உள்ள கியிலோங் நுழைவாயில் பகுதியில் கடும் உயிரிழப்பு ஏற்பட்டது. இந்த பேரழிவு ஏற்பட்ட பின், மீட்புப்பணியாளர்கள் இரவு பகலாக மீட்புதவி பணியில் ஈடுபட்டு, ஓய்வின்றி விரைந்து செயல்பட்டு உயிர்களைக் காக்கும் வழிகளில் முழுமூச்சுடன் செயல்பட்டு வருகின்றனர். இருப்பினும் மீட்புப் பணி இன்னும் அதிக சிக்கல்களைச் சந்தித்துள்ளது. முதலாவது, மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பரப்பளவு மிகவும் அதிகமானது. பனிச்சரிவு ஏற்பட்ட பின், பாறை உள்ளிட்ட பல்வேறு பொருட்களுடன் கலந்து உருவாகிய மண்சரிவு, 20கிலோமீட்டர் வேகத்துடன், செங்குத்தாகச் சரிந்து சுமார் 3300 மீட்டராக இருந்த நிலைமையில், கியிலோங் நுழைவாயில் பகுதியில் பாய்ந்து சென்று அடைந்த்து. இதனால் தேடல் மற்றும் மீட்புப் பகுதி பன்மடங்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடத்தை கண்டறியும் பணியின் சவால் பெருமளவில் அதிகரித்துள்ளது.

இரண்டாவது, போக்குவரத்து வசதிகள் துண்டித்துப்போனது.

மூன்றாவது, பாதிக்கப்பட்ட பகுதி செங்குதான நிலப்பரப்பைக் கொண்டது. சில பாதைகளின் அகலம் வெறும் 3மீட்டரே உள்ளன. இதனால், பெரிய இயந்திரங்களை கொண்டு செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது.

நான்காவது, உயரமான மலைப் பள்ளத்தாக்குகளில் பனிச்சரிவுகள் சாதாரணமாக நிகழ்கின்றன. மேலும், வலுவான குறுக்குக் காற்று, போன்ற சிக்கலான சிக்கலான வானிலை நிலைமையால், வான் வழியான மீட்பு சக்திகளும் குறிப்பிட அளவில் தடை செய்யப்பட்டது.

You May Also Like

More From Author