15ஆவது சீனத் தேசிய விளையாட்டுப் போட்டி, நவம்பர் 9ஆம் நாளிரவு, குவாங்தொங் மாநிலத்தின் குவாங்சோ நகரில் அமைந்துள்ள ஒலிம்பிக் விளையாட்டு மையத்தில் நடைபெற்றது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் இந்த விளையாட்டுப் போட்டி துவங்கியதாக அறிவித்தார்.
இந்த விளையாட்டுப் போட்டி, சீனாவின் குவாங்தொங் மாநிலம், ஹாங்காங் மற்றும் மக்கௌ சிறப்பு நிர்வாக பிரதேசங்கள் கூட்டாக தேசிய விளையாட்டுப் போட்டியை நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
9ஆம் நாளிரவு 19 மணி 58 நிமிடத்தில் ஷிச்சின்பிங் மற்றும் அவரது மனைவி பங் லீயுவன் முதலியோர் இவ்விளையாட்டு மையத்தில் நுழைந்த போது, மக்கள் பெரும் வரவேற்பு அறித்தனர்.
20 மணியில், இவ்விளையாட்டுப் போட்டிக்கான துவக்க விழா அதிகாரப்பூர்வமாக துவங்கியது. 20 மணி 43 நிமிடத்தில் ஷிச்சின்பிங் இந்த விளையாட்டுப் போட்டி துவங்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இம்மையத்தில் திரண்டிந்த மக்கள் மகிழ்ச்சியில் ஏழுப்பிய கரகோஷங்கள் நீண்ட நேரம் நீடித்தது.
எதிர்காலம் பற்றிய கனவு நனவாக்குவது என்ற தலைப்பில் கலை மற்றும் விளையாட்டு நிகழ்ச்சியும் துவக்க விழாவில் அரங்கேற்றப்பட்டன. ஆக்கப்பூர்வமான தேசிய விளையாட்டுப் போட்டிகள், உயிர் ஆற்றல் மிகுந்த குவாங்தொங்-ஹாங்காங்-மக்கௌ பெரிய விரிகுடா பிரதேசம் என்ற தலைப்பு அம்சங்கள் இதன் மூலம் வெளிகாட்டப்பட்டுள்ளன.
