பெய்டோ வழிக்காட்டு செயற்கைக்கோள் அமைப்பின் பயன்பாடு மற்றும் மேம்படுத்தலை விரைவுபடுத்தும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் பெய்டோ அமைப்பின் பெரிய அளவிலான பயன்பாட்டு முன்னோடித் திட்டங்கள் தொடங்கப்பட உள்ளது என்று சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உள்ளூர் பிரதேசங்களில் பெய்டோ அமைப்பின் வசதி, நகர்ப்புற வளர்ச்சி பண்புகள் மற்றும் கட்டுமான நிலைமை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, மக்களின் நுகர்வு, தொழில்துறை உற்பத்தி மற்றும் நகரங்களின் புத்தாக்கம் ஆகிய துறைகளில் இந்தத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் துறையில், ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், பகிரவு கார்கள் மற்றும் குறைந்த உயரத்தில் பறக்கும் ட்ரோன்கள் ஆகியவற்றில் பெய்டோ அமைப்புப் பயன்படுத்தப்படும் என்றும், தயாரிப்புத் துறையில் பெய்டோ அமைப்பின் பயன்பாட்டை மேம்படுத்த நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.