சீன-இந்திய எல்லை பிரச்சினைக்கான தீர்வுத் திட்ட முன்னேற்றம்

அக்டோபர் 25ம் நாள் நடைபெற்ற சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தியாளர் கூட்டத்தில், இந்தியாவும், சீனாவும் இரு நாட்டு எல்லை சர்ச்சைக்குரிய பகுதியிலிருந்து படைகளை வெளியேற்றத் தொடங்கியுள்ளன என்று இந்தியாவைச் சேர்ந்தவர்கள் தகவல் வெளியட்டனர்.

இத்தகவலை சீனா உறுதிப்படுத்தி, மேலதிக தகவல்களை வழங்கலாமா என்று செய்தியாளர் ஒருவர் கேட்டார்.

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியேன் இதற்குப் பதிலளிக்கையில், அண்மையில் எல்லை பிரச்சினைகள் குறித்து இரு நாடுகள் எட்டியுள்ள தீர்வுத் திட்டத்தின்படி, இரு நாட்டு முன்னணி படைகள், தொடர்புடைய பணிகளைப் புரிந்து வருகின்றன. இதுவரை, இத்திட்டம் தடையின்றி முன்னேறி வருகிறது என்று தெரிவித்தார்.

 

You May Also Like

More From Author