உலகளவில் வெற்றி பெற விரும்பினால் சீனாவைத் தெரிவு செய்ய வேண்டும்: வெளிநாட்டு வணிகர்கள் கருத்து

போஆவ் ஆசிய மன்றத்தின் நடப்பு ஆண்டுக் கூட்டம் அண்மையில் நிறைவடைந்தது. 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் துவக்க ஆண்டில், புதிய நிலைமை, புதிய வாய்ப்பு, புதிய ஒத்துழைப்பு ஆகியவற்றைக் கருப்பொருளாகக் கொண்டு நடைபெற்ற இம்மன்றக் கூட்டம், உலகளாவிய வெளிநாட்டு முதலீடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும் இம்மன்றக் கூட்டம் நடைபெற்ற போது ஹைனான் தாராள வர்த்தக துறைமுகத்தில் சுதந்திரமான சுங்க நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்ட 100ஆவது நாள் நிறைவு அடைந்துள்ளது. இக்குறுகிய காலத்தில் ஹைனானில் 737 வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் புதிதாக நிறுவப்பட்டு, கடந்த ஆண்டின் இதேகாலத்தில் இருந்ததை விட 33.5 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இத்தாலி பொருளாதார மேம்பாட்டு அமைச்சகத்தின் முன்னாள் துணை அமைச்சர் ஜெராசி கூறுகையில், இத்தாலியின் தயாரிப்புகள் வரி இல்லாத நிலையில் ஹைனானுக்கு ஏற்றுமதி செய்ய முடியும். தகுதியுடைய பொருட்கள் இத்தீவில் 30 விழுக்காட்டுக்கு மேலான கூட்டு மதிப்பை நனவாக்கினால், இவை பூஜ்யம் வரியுடன் சீனாவின் இதர பகுதிகளுக்குள் நுழையலாம். இது ஐரோப்பிய நிறுவனங்களுக்கு, குறிப்பாக இத்தாலி நிறுவனங்களுக்கு மதிப்புமிக்க வாய்ப்பாகும் என்று தெரிவித்தார்.

பிரிட்டன்-சீனா வணிக சங்கத்தின் தலைவர் பீட்டர் பெர்னெட் கூறுகையில், உலகளவில் வெற்றி பெற விரும்பினால் சீனாவைத் தெரிவு செய்ய வேண்டும் என பிரிட்டனின் சில நிறுவனங்களுக்கு முன்மொழிவு அளித்துள்ளேன் என்று கூறினார். சேவைத் துறையில் தாராள வர்த்தக உடன்படிக்கையை உருவாக்கும் சாத்தியம் பற்றி சீனாவும் பிரிட்டனும் ஆய்வு செய்து வருகின்றன. சீனா திறப்பை வரவேற்கும் இடமாகும் எனவும் பிரிட்டன்-சீன ஒத்துழைப்பு மூலம் அசாதாரண வளர்ச்சி காணப்படும் எனவும் கருதுகின்றேன் என்று அவர் குறிப்பிட்டார்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author