நேற்று, ஜூலை 19 அன்று, உலக நாடுகளை போலவே சீனாவில் உள்ள வெளிநாட்டு வணிகங்கள் மற்றும் சொகுசு ஹோட்டல்களை பாதித்த மைக்ரோசாப்ட் விண்டோஸ் செயலிழப்பு, அந்த நாட்டின் முக்கிய உள்கட்டமைப்பை, விமான நிறுவனங்கள் முதல் வங்கிகள் வரை பாதிக்கவில்லை.
இதனை தொழில்துறை ஆதாரங்கள் மற்றும் சமூக ஊடக பதிவுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
உள்ளூர் நேரப்படி மாலை 6 மணி நிலவரப்படி, உலகமே ஸ்தம்பித நேரத்தில், சீனாவின் பிரதான நிலப்பரப்பில் உள்கட்டமைப்பு சீர்குலைவுகள் குறித்து எந்த அறிக்கையும் இல்லை.
