சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜனவரி 13ஆம் நாள் காலை பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் சீனாவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள கிரெனெடா தலைமை அமைச்சர் டிக்கான் மிட்செலைச் சந்தித்துரையாடினார்.
சந்திப்பின் போது, ஷிச்சின்பிங் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளில் சீன மற்றும் கிரெனெடாவின் உறவு நிதானமாக வளர்ந்து வருகிறது என்று சுட்டிக்காட்டினார். கிரெனெடாவுடன் இணைந்து வளர்ச்சி நெடுநோக்கில் இரு நாடுகளுக்கிடையே உள்ள இணைப்பை வலுப்படுத்தி இரு தரப்பின் ஒத்துழைப்புகளில் மேலதிக சாதனைகளை உருவாக்குவதை முன்னேற்றி இரு நாட்டு மக்களுக்கு மேலதிக நன்மைகளைப் படைக்கச் சீனா விரும்புகிறது என்றார்.
ஒரே சீனா கொள்கையில் கிரெனெடா உறுதியாக ஊன்றி நிற்கும். மேலும், கிரெனெடா சீனாவுடன் உறுதியாக நின்று 3 பெரிய உலக முன்னெடுப்புகளை நன்கு நடைமுறைப்படுத்தி உலக அமைதி மற்றும் நிலைப்புத் தன்மையைப் பேணிக்காக்க விரும்புவதாக மிட்செல் தெரிவித்தார்.