உலக அளவில் சூரிய மின்கலனுக்கான காப்புரிமை விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் முதலிடம்:சீனா

சீனத் தேசிய அறிவுசார் சொத்துரிமை பணியகம் அண்மையில் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, தற்போது, சீனாவில் சூரிய மின்கலங்களின் காப்புரிமை விண்ணப்பங்களின் எண்ணிக்கை, 1 இலட்சத்து 26 ஆயிரத்து 400 ஆகும். இந்த எண்ணிக்கையில் சீனா உலகின் முதல் இடத்தில் உள்ளது.


கடந்த சில ஆண்டுகளில், சீனாவின் சூரிய ஒளி மின் உற்பத்தி தொடர்பான காப்புரிமை விண்ணப்பங்கள் ஆண்டுக்கு சராசரியாக 23.1 விழுக்காடு அதிகரித்து வருகின்றன. காப்புரிமைகளின் தரமும் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. சூரியன் மின்கலங்களின் ஆற்றல் மாற்றச் செயல்திறன் குறித்து, சீன நிறுவனங்கள் உலகின் முன்னிலை வகிக்கின்றன.

You May Also Like

More From Author