2026 உலக இணைய கருத்தரங்கின் வூட்சென் மாநாடு நிறைவு

Estimated read time 1 min read

2026 உலக இணைய கருத்தரங்கின் வூட்சென் மாநாடு பல்வேறு நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றி 5-ஆம் நாள் நிறைவடைந்தது. இதில் 138 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 1800 விருந்தினர்கள் பங்கெடுத்து, டிஜிட்டல் நுண்ணறிவுத் துறையின் வளர்ச்சி பற்றி கலந்தாராய்ந்தனர்.

உலகளாவிய திறந்த செயற்கை நுண்ணறிவுத் துறையைக் கூட்டாக உருவாக்குவதற்கான செயல் முன்முயற்சியை இம்மாநாட்டில் வெளியிடப்பட்டது. அது மட்டுமின்றி, திறப்பையும் வளர்ச்சியையும் கூட்டாக முன்னேற்றுதல், பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையைக் கூட்டாகப் பேணிக்காத்தல், பேச்சுவார்த்தை மற்றும் நிர்வாகத்தில் கூட்டாகப் பங்கெடுத்தல், பரஸ்பர நலன் தருவது மற்றும் அனைவரையும் அணைத்துச் செல்வதில் கூட்டாக ஊன்றி நிற்றல் ஆகிய 4 துறைகள் பற்றி 18 திட்டவட்டமான செயற்பாட்டு முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

உச்சிமாநாட்டின் போது நடைபெற்ற இணையத்தின் ஒளி என்ற பொருட்காட்சியில் 1000த்துக்கும் அதிகமான புதிய தொழில் நுட்ப உற்பத்திப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. 100க்கும் அதிகமான மனித உருவ ரோபோக்கள் வேலை செய்யும் நேரடி காட்சிகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.  

Please follow and like us:

You May Also Like

More From Author