“அன்று விசில் ஊத சொன்னவர்… இன்று அரசியல் வேண்டாம் என்கிறாரா?” – CM விஜய்யை வம்பு இழுத்த சாட்டை துறைமுருகன்…. வைரலாகும் எக்ஸ் பதிவு….!! 

Estimated read time 1 min read

தேர்தல் காலங்களில் மக்கள் முன் வைக்கப்படும் வாக்குறுதிகளும் பேச்சுக்களும், வெற்றி பெற்றதற்குப் பிறகோ அல்லது காலப்போக்கிலோ எவ்வாறு மாறுகின்றன என்பதற்கு அரசியல் மேடைகள் பலமுறை சாட்சியாக இருந்திருக்கின்றன…”

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தேர்தல் வெற்றிக்கு முன்பாக நடத்திய ஒரு மாநாட்டின் போது, பங்கேற்ற சிறுவர்களிடம் “உங்களது பெற்றோர்கள், சொந்தக்காரர்கள், மாமா, அத்தை ஆகியோரிடம் கூறி நமது விசில் சின்னத்திற்கு வாக்கு போடச் சொல்லுங்கள்” என்று தீவிரமாக ஆதரவு திரட்டும் வகையில் பேசியிருந்தார். குழந்தைகள் மூலம் பெற்றோர் மற்றும் உறவினர்களின் வாக்குகளைக் கவரும் ஒரு வியூகமாக அந்தப் பேச்சு பார்க்கப்பட்டது.

ஆனால், அண்மையில் நடைபெற்ற கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவில் மாணவர்களிடையே உரையாற்றிய அவர், “தற்போதைய சூழலில் மாணவர்களாகிய உங்களுக்கு அரசியல் தேவையில்லை, படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துங்கள்” என்ற தொனியில் அறிவுரை வழங்கிப் பேசினார். விஜய்யின் இந்த மாறுபட்ட இரு பேச்சுகளும் தற்போது சமூக வலைதளங்களில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த துரைமுருகன் தனது எக்ஸ் (X) தளப் பக்கத்தில் விஜய்யின் இந்த இரண்டு பேச்சுகளையும் ஒப்பீடு செய்யும் விதமாக ‘அன்று vs இன்று’ மற்றும் ‘தேர்தலுக்கு முன் vs தேர்தலுக்குப் பின்’ என்ற தலைப்பில் ஒரு வீடியோவை இணைத்துப் பதிவிட்டுள்ளார்.

அதில், “குழந்தைகளை பெற்றோர்கள் காதில் போய் விசிலடித்து வாக்கு போடச் சொன்ன விஜய், இன்று உங்களுக்கு அரசியல் தேவையில்லை என்கிறார். வெல்லும் வரை ஒரு பேச்சு, வென்ற பிறகு ஒரு பேச்சு!” எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author